மும்பை 26/11: மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல்

--

வாஷிங்டன்:

மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி (வயது 58) மீது சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டார்.

மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெட்லி, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மன்னிப்பு வழங்கினால் அப்ரூவராக மாறத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிகாகோ சிறையில் டேவிட் ஹெட்லியை சில தினங்களுக்கு முன்பு சக கைதிகள் கடுமையாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஹெட்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.