ரன்கள் குவிக்க தொடர்ந்து திணறும் மும்பை – இன்றைய கணக்கு 131 மட்டுமே!

சென்ன‍ை: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி, 131 ரன்களை மட்டுமே சேர்த்தது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணியில், கேப்டன் ரோகித் மட்டுமே 52 பந்துகளில் 63 ரன்களைச் சேர்த்தார். டி காக் 3 ரன்களுக்கும், இஷான் கிஷான் 6 ரன்களுக்கும் அவுட்டாக, சூர்யகுமார், 27 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

பொல்லார்டின் பங்கு 12 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே. இறுதியில், 20 ஓவர்களில், அந்த அணியால் 131 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி, எளிய இலக்கை எளிதாக எட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் அணியில், ஹென்ரிக்யூஸ், தீபக் ஹூடா, முகமது ஷமி மற்றும் பிஷ்னாய் ஆகிய நால்வரும், வீசிய பந்துகளைவிட, ரன்களைக் குறைவாகவே கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.