மும்பை 26/11: ஐபிஎஸ் அதிகாரி கொல்லப்பட்டதில் சதி….உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

மும்பை:

மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டார். இந்நிலையில் இவர் தீவிரவாதிகள் தாக்குதலில் இறக்கவில்லை. சதி காரணமாக வேறு நபர்களால் கொல்லப்பட்டார் என்று ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது. அதனால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தயாராக இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கார்ட்டூன் கேலரி