டெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக் கொள்ள, மகாராஷ்டிரா மாநில அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனமான  ஹாஃப்கைன் இன்ஸ்டியூட்டுக்கு (Haffkine institute) மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ஆம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 15 நாட்கள் லாக்டவுன் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. ஆனால்,  நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு போதிய அளவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவில்லை என்று மகாராஷ்டிரா அரசு குற்றம் சாட்டியது. மேலும் தடுப்பூசி போடும் மையங்களையும் மூடி வந்தது.

இந்த நிலையில்,  வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்யும், இந்திய தடுப்பூசிகைள  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன..

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனமான தயாரிப்பான   கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க, மகாராஷ்டிரா மாநில  அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹாஃப்கைன் இன்ஸ்டியூட்டுக்கு   மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.

உள்நாட்டு தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அடிப்படையில், பாரத் பயோடெக் கோவாக்சின் கொரோனாயை தயாரிக்க மத்திய அரசும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகமும் மும்பையில் உள்ள ஹாஃப்கைன்  நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக மராட்டிய முதலமைச்சரின் பிரத்யேக டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.