அபுதாபி: பெங்களூருவுக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை அடித்தது. அந்த அணியின் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 74 ரன்களை எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய மும்பை அணியில், துவக்க வீரர்கள் குவின்டன் டி காக் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் குறைந்த ரன்களுக்கு நடையைக் கட்ட, ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார் சூர்யகுமார் யாதவ்.
43 பந்துகளை சந்தித்த அவர், 3 சிக்ஸர்கள் & 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களை விளாசினார். ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 17 ரன்களை அடித்தார்.
இறுதியில், 19.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்து வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது மும்பை அணி.
பெங்களூரு அணியின் வீரர் டேல் ஸ்டெய்ன் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 43 ரன்களை வாரி வழங்கினார்.