துபாய்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 49 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது கொல்கத்தா அணி.

மும்பை அணி நிர்ணயித்த 196 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டிச் சென்ற கொல்கத்தா அணியில், அதற்கான அறிகுறியே இறுதிவரை தென்படவில்லை எனலாம்.

ஏதோ, விக்கெட்டுகளை முற்றிலும் இழந்துவிடாமல், எப்படியேனும் 20 ஓவர்களை ஒப்பேற்றலாம் என்பதுபோலவே அந்த அணி ஆடியது.

பந்துவீச்சாளர் பாட்கம்மின்ஸ் 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் அடித்ததுதான் அந்த அணியின் சிறப்பான இன்னிங்ஸ். மற்றபடி, கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 30 ரன்களை அடித்து தனது கடமையை முடித்துக்கொண்டார்.

நிதிஷ் ரானா 24 ரன்களையும், இயோன் மோர்கன் 16 ரன்களையும் அடித்தனர். கடைசியில், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா அணி.

மும்பை அணியில், பெளல்ட், பும்ரா, பேட்டிசன் மற்றும் சாஹர் ஆகியோர், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.