மும்பை:

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தாகீர் மெர்சண்ட்டுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரமாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாகீர் மெர்சன்ட், பெரோஷ் கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அபு சலீம், கரிமுல்லா கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ரியாஸ் சித்திற்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக தாகீர் மெர்சண்ட் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தாகீர் மெர்சண்ட்டுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.