மும்பை: தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசுவதற்கு முன்னதாக தண்ணீருக்கு பதிலாக மும்பை மாநகராட்சி இணை ரமேஷ் பவார் அதன் பக்கத்தில் இருந்த கிருமிநாசினியை எடுத்து குடிக்க, அங்கு சிறிது நேரம் பரபரப்பு உருவானது.

இதுகுறித்து ரமேஷ் பவார் கூறியதாவது: நான் எனது உரையைத் தொடங்கும் முன்பு நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் பாட்டிலைத் எடுத்து குடித்தேன்.

அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்களும், கிருமிநாசினியும் ஒரே மாதிரியாகவே இருந்தன. மாற்றி குடித்தவுடனே தவறை உணர்ந்தேன். இது போன்று சம்பவங்கள் தற்செயலானது என்று தெரிவித்தார்.