மும்பை குண்டுவெடிப்பு : தூக்குதண்டனை குற்றவாளி மரணம்

மும்பை

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குதண்டனை அளிக்கப்பட்ட முஸ்தபா தோசா நெஞ்சுவலியால் மரணம்

மும்பையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் முஸ்தபா தோசாவும் ஒருவர்.  இவர் மும்பை தாதாவான தாவூத் இப்ராஹிமின் படை தளபதிகளில் ஒருவர் என கருதப்படுபவர்.   இவருக்கு சி பி ஐ நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது தோசா மிகவும் நெஞ்சு வலிப்பதாகவும், தனக்கு ப்ரெஷர், சுகர் இருப்பதாகவும் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.  அவரை சிறை அதிகாரிகள் மும்பை ஜே ஜே மருத்துவமனையில் அனுமத்தித்து சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை பலனின்றி முகமது தோசா மரணம் அடைந்தார்/