மும்பை பெளலிங்கை வேட்டையாடிய அம்பதி ராயுடு, மொயின் அலி & டூ பிளசிஸ்..!

புதுடெல்லி: மும்பைக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 218 ரன்களைக் குவித்துள்ளது.

சென்னையின் 3 பேட்ஸ்மென்கள் அரைசதமடித்தனர். இன்றையப் போட்டியில், சென்னை அணி சார்பில், 14 பவுண்டரிகள் அடிக்கப்பட்ட நிலையில், அடிக்கப்பட்ட சிக்ஸர்களின் எண்ணிக்கையோ 16.

டூ பிளசிஸ் 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களையும், மொயின் அலி 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும், அம்பதி ராயுடு 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 72 ரன்களையும் விளாசி எடுத்தனர்.

மொத்தத்தில், இன்றைய நாள் அம்பதி ராயுடுவின் நாளாக அமைந்துபோனது.

இன்று ஜடேஜாவுக்கு பவர் எடுக்கவில்லை. 22 பந்துகளை சந்தித்த அவர், 22 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இன்று மும்பையின் அனைத்து பெளலர்களும் அடிவாங்கினர். பொல்லார்டு 2 ஓவர்கள் மட்டும் போட்டதால் தப்பினார். பும்ராவோ, 4 ஓவர்களுக்கு 1 விக்கெட் மட்டுமே எடுத்து, 56 ரன்களை வாரி வழங்கினார்.