மும்பை:

ந்தியாவின் மிச்சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் மும்பையின் ஜுகு கடற்கரையும் ஒன்று…  தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், காவல் துறையினர் சார்பில், கடற்கரையில் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது… மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

கடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் மும்பையின் ஜூஹு பீச் முக்கியமானது. மும்பையின் பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளும் பிரசித்தி பெற்றது… அத்துடன்  அதோடு ஐஸ் பாப்ஸிகல்ஸ் அல்லது கோலாஸ் எனும் உணவு வகை பயணிகளிடையே வெகு பிரபலம்.

மேலும், இந்தக் கடற்கரையின் சூரிய அஸ்த்தமனக் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பொது மக்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்… இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…