டிகை கங்கனா ரனாவத் மகாரஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனாவுடன் மோதி வருகிறார். ’மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பது போல் இருக்கிறது என அதிரடியாக பேசினார். கங்கனா. இது ஆளும் மகாராஷ்டிரா சிவசேனாவை கோபத்தில் ஆழ்த்தியது. கங்கனா பேச்சுக்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


சிவசேனா கட்சியில் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா ரனாவத்தை கடுமையாக கண்டித்ததுடன் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இமாசல பிரதேசம் மனாலியில் தங்கி யுள்ள கங்கனா ரணாவத்  தனக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற் கேட்டார். அவருக்கு உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. அவர் இன்று மனாலியிலிருந்து மும்பைக்கு புறப்பட்டு வருகிறார்.
இதற்கிடையில் மும்பை பாந்த்ரா, பாலிஹில்லில் பகுதியில் உள்ள கங்கனா வீட்டில் அனுமதி பெறாமல் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி கங்கனா வீட்டு கட்டிடத்தின் முகப்பில் நோட்டிஸ் ஒட்டியது.
’கங்கனா வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் செய்யவில்லை. அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கங்கனாவை அச்சுறுத்துகின்றனர்’ என கங்கனாவின் வக்கீல், ’தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி யளவில் மும்பை மாநகராட்சி மீண்டும் கங்கனா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. பிறகு 12.30 மணிக்கு கங்கனா வீட்டின் ஒரு பகுதி இடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நடவடிக் கைக்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில், கங்கனா வக்கீல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.