மும்பை,
டைபெற இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதியஜனதாவை எதிர்த்து சிவசேனாவுக்கு ஆதரவாக ஹர்திக் பட்டேல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதன் காரணமாக மும்பை பா.ஜ.வினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தியவர் ஹர்திக் பட்டேல்.  இதனால் ஒரே நாளில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார்.

இவர் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதியஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அதுவும் பாரதியஜனதாவுன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தார்.

இது வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் ஹர்திக் பட்டேல் இன்று  மும்பைக்கு வந்துள்ளார். அவரை  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.

நாளை முதல் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கி றார். மும்பையில் குஜராத் பட்டேல் இன மக்கள் அதிகம் வசிக்கும் கோரேகான், பிரென் லிம் பாசாயா ஆகிய வார்டு களில் சிவசேனாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்குகிறார். மற்ற இடங்கிளல் ரோடுஷோ மூலம் ஆதரவு திரட்டுவார் என கூறப்படுகிறது.

குஜராத்தில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்விகளில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தி, சிறைக்கு சென்றவர் 24 வயது ஹர்திக் பட்டேல், இவர்மீது தேச துரோக வழக்கு உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.