இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரன்ட்

டெல்லி:

கடந்த 2002ம் ஆண்டு ஜான் கி பாஸி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சஞ்சய் தத்துக்கு ரூ. 50 லட்சம் முன் பணமாக தயாரிப்பாளர் ஷகில் கொடுத்திருந்தார். சில காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து சஞ்சய் தத் திடீரென விலகினார்.

முன் பணத்தை திரும்ப கேட்ட போது பணத்தை திருப்பி தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் ஷகில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சஞ்சய் தத் ரூ. 2 கோடி தர உத்தரவிட்டது. அதனை சஞ்சய் தத் ஏற்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் சஞ்சய் தத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக 2 முறை உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் சஞ்சய் தத் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ. 10 ஆயிரம் பிணையத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றார். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரணன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.