மும்பை : தாராவியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மும்பை

மும்பையில் உள்ள தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 12380 ஆகி உள்ளது.  மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 414 ஆகி உள்ளது.  இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மற்றும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  இங்கு 3000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 295 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பை மிகவும் மக்கள் நெருக்கம் உள்ள ந்கர் என்பதால் இங்கு அதிக அளவில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மும்பையில் தாராவி பகுதி உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாகும்.  இந்த பகுதியில் சுமார் 15 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்

இங்கு சுமார் 100 சதுர அடி உள்ள அறையில் ஐந்து முதல் 8 பேர் ஒன்றாக வசித்து வருகின்றனர்.  எனவே இங்கு சமூக இடைவெளிக்கு வாய்ப்பில்லை. என்னும்  நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

தாராவி பகுதியில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரொன தொற்று உறுதி ஆனது.  இதையொட்டி அந்த பகுதியில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை இந்த பகுதியில் கொரொனாவால் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.