மும்பை

ங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியர் மகனுக்கு மும்பை டப்பாவாலாக்கள் வெள்ளி நகைகள் பரிசளிக்க உள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கில் தம்பதியினருக்கு இந்த மாதம் ஆறாம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது.   இந்த குழந்தைக்கு ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸர் என பெயரிடப்படுள்ளது.   இங்கிலாந்து தற்போது குடியரசாக இருந்த போதிலும் மக்கள் அரச குடும்பத்தின் மீது விசுவாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

மும்பையில் உள்ள டப்பாவாலாக்கள் என அழைக்கப்படும் மதிய உணவு அளிப்போர் உலகப் புகழ் பெற்றவர்கள் ஆவார்கள்.    இவர்களும் இங்கிலாந்து மக்களைப் போல் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நேசம் பாராட்டுபவர்கள்.   அதைப் போல் இங்கிலாந்து அரச குடும்பத்தினரும் இவர்கள் மீது அன்புடன் உள்ளனர்.

கடந்த 2003 அம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மும்பை வந்த போது இவர்கள் சேவையை பாராட்டி உள்ளார்.   அதன் பிறகு தமக்கும் கமில்லா பார்க்கருக்கும் 2005 ஆம் வருடம் நடந்த திருமணத்துக்கு இந்த டப்பாவாலா சங்க நிர்வாகிகள் இருவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போதிருந்து தொடரும் இந்த அன்பு ஹாரி மற்றும் மேகன் திருமணத்துக்கு சிறப்பு பரிசு அளித்த பிறகு மேலும் வலுவானது.   தற்போது டப்பாவாலாக்கள் சங்க  செய்தியாளர் சுபாஷ் தாலேகர், “எங்கள் சஙக்ம் சார்பாக குழந்தை ஆர்ச்சிக்கு மகாராஷ்டிராவின் சிறப்பு வெள்ளிநகை பரிசுப் பெட்டி அனுப்ப உளோம்.  அதில் வெள்ளியிலான அரைஞாண் கொடி, கொலுசு மற்றும் காப்புகள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த நகைகள் மகாராஷ்டிர வழக்கப்படி தாத்தா வீட்டில் இருந்து பேரக் குழந்தைகளுக்கு சீராக அளிக்கப்படுபவை ஆகும்.  இளவரசர் சார்லஸ் தங்கள் நண்பர் என்பதால் அவருடைய பேரன் தமக்கும் பேரன் என அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன்ர்.   இதை தங்கத்தில் அனுப்ப முதலில் முடிவு செய்த சங்கத்தினர் பிறகு பணப்பற்றாக்குறை காரணமாக வெள்ளியில் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இளவரசர் ஹாரி திருமண தினத்தன்று இவர்கள் இரு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இனிப்புக்கள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.