மராட்டியத்திற்கு முந்தைய அளவிலேயே ஆக்ஸிஜன் வழங்குக: உயர்நீதிமன்றம்

மும்பை: மராட்டிய மாநிலத்திற்கு, முன்பு வழங்கப்பட்ட அளவிலேயே, மீண்டும் ஆக்ஸிஜன் வழங்கப்பட வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம்(நாக்பூர் அமர்வு) வலியுறுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில், கொரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இதனால், அம்மாநிலத்தில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவை குறைத்தது மத்திய அரசு.

நாக்பூருக்கு, சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாய் பிளான்ட்டிலிருந்து வழங்கப்பட்ட 110 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜன் என்ற அளவிலிருந்து, 60 மெட்ரிக் டன்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மராட்டிய மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.

இந்நிலையில்தான், நாக்பூர் அமர்வில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுனில் சுக்ரே மற்றும் எஸ்எம் மோடக் ஆகியோர், நாட்டின் கொரோனா நோயாளிகளில் 40% பேரைக் கொண்டுள்ள மராட்டிய மாநிலத்திற்கு, எதற்காக ஆக்ஸிஜன் அளவைக் குறைக்க வேண்டும்? எனவே, உடடினயாக மராட்டிய மாநிலத்திற்கு பழைய அளவிலேயே ஆக்ஸிஜன் விநியோகத்தை வழங்க வேண்டும் என்றுள்ளனர்.