டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்த மும்பை அணி – களமிறங்கிய பெங்களூரு!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியுள்ளது.

பெங்களூரு சார்பில் தேவ்தத் படிக்கல்லும் ஆரோன் பின்ச்சும் ஆடி வருகின்றனர்.

இந்த இரு அணிகளுமே இதுவரை ஆடிய 2 போட்டிகளில், தலா 1 வெற்றி & 1 தோல்வியைப் பெற்றுள்ளன. எனவே, தங்களின் மூன்றாவது போட்டியை வெல்லும் மும்முரத்தில் 2 அணிகளுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில், மிகவும் மோசமாக தோற்று விமர்சனத்திற்கும் ஆளானது. இந்நிலையில், இன்று ஒரு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது கோலியின் அணி.