பேட்டிங்கில் திணறிவரும் மும்பை அணி – 13 ஓவர்களில் 83 ரன்கள் மட்டுமே!

ஷார்ஜா: பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்துவரும் மும்பை அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது.

துவக்க வீரர் குவின்டன் டி காக் 5 பந்துகளை வீணடித்து டக் அவுட் ஆனார். கேப்டன் ரோகித் ஷர்மா 35 பந்துகளை சந்தித்து 41 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 7 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே அடித்து நடையைக் கட்டினார்.

தற்போது ரோகித்துடன் ஆடிவரும் இஷான் கிஷான் 32 பந்துகளில் 28 ரன்களையே அடித்துள்ளார். தற்போதுவரை, ஆட்டம் ஏதோ ஒருநாள் போட்டியைப் போல் போய்க்கொண்டுள்ளது.

பஞ்சாப் அணியின் காட்ரெல் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.