ஐ.பி.எல்.: கொல்கத்தாவை  வென்ற மும்பை

--

 

கொல்கத்தாவுக்கு எதிரான  இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பத்தாவது  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் முழுவதும் முடிந்து தற்போது தகுதி சுற்றுப் போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

முதல் தகுச்சுற்றில் புனே அணியும், எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றன.  இந்நிலையில் தற்போது இரண்டாவது  தகுதிச் சுற்றுப்போட்டி பெங்களூருவில் தற்போது நடந்து வருகிறது. இதன் படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி பும்ரா மற்றும் கரண் சர்மாவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் லின் (4), நரைன் (10), உத்தப்பா (1), கம்பிர் (12), கிராண்ட்ஹோம் (0)  ஆகியோர் மிக்க குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் (31) – ஜாக்கி (28) ஜோடி 6வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 18.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி சார்பில் சுழல் சூறாவளி கரண் சர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், ஜான்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து ஆட வந்த மும்பை அணியின்  தொடக்க வீரர் சிம்மன்ஸ் (3), படேல் (14), ராயுடு (6) ஆகியோர் குறைவான ரன்களே எடுத்தனர். பிறகு ஆட வந்த கேப்டன் ரோகித் சர்மா – குர்னல் பாண்டியா ஜோடி ஓரளவு சிற்பபாக விளையாடி ரன் சேர்த்தது. சர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, பாண்டியாவுடன் போலார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கடைசி வரையில் மெதுவாக ரன் சேர்த்து 14.3வது ஓவரில் 4 விக்கெட் மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றி பெற்றுத்தந்தது.  குர்னல் பாண்டியா (45) ரன்களுடனும், போலார்டு (9) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா அணி சார்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டும், உமேஷ் மற்றும் நைல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இறுதியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

You may have missed