மும்பை அணிக்கே கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம்: மைக்கேல் வான்

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியே, 14வது ஐபிஎல் சாம்பியன் கோப்பையையும் வெல்லும் என்று கணித்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

அதேசமயம், ஒருவேளை மும்பை அணி தனது வாய்ப்பை தவறவிட்டால், அதை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பிடித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, கோப்பையை வெல்லப்போவது யார்? என்று கணிப்பது மிகவும் முந்தைய கணிப்புதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், ரோகித் ஷர்மாவின் அணிக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம், இதே மைக்க‍ேல் வான் கூறும்போது, “இந்திய டி-20 அணியைவிட, மும்பை இந்தியன்ஸ் அணி வலுவானதாக இருக்கிறது” என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்டு, 7 நாள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயிற்சியில் இணைகிறார்.