துபாய்: இன்று நடைபெறக்கூடிய ஐபிஎல் லீக் போட்டியில், நடப்புச் சாம்பியன் மும்பையும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

கொல்கத்தா அணி, ஏற்கனவே கடந்த 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில், இரண்டுமுறை கோப்பை வென்ற அணியாகும்.

மும்பை – கொல்கத்தா அணிகள், ஐபிஎல் தொடர்களில் இதுவரை 25 முறை மோதியுள்ளன. அதில், 19 முறை மும்பை அணிதான் வென்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வென்றுள்ளது.

மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்து, இன்று வெற்றியை எதிர்பார்த்து காத்துள்ளது. அதேசமயம், தனது முதல் போட்டியில் இன்று களமிறங்கும் கொல்கத்தா அணி, தொடரை வெற்றியுடன் துவக்க முற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஐபிஎல் தொடரில், மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்ல, கொல்கத்தா அணி 5வது இடமே பிடித்தது.