சமூக வலை தள விமர்சனம்…..விராட் கோஹ்லி, அவரது மனைவிக்கு நோட்டீஸ்

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு மும்பையை சேர்ந்தவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அர்ஹான் சிங். இவர் சில நாட்களுக்கு முன் காரில் சென்றார். அப்போது ஜன்னல் வழியாக குப்பையை ரோடில் வீசினார். இதை கண்ட அனுஷ்கா சர்மா அர்ஹான் சிங்கை கண்டித்தார்.

இந்த வீடியோ காட்சியை வீராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்ததாக கூறி விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு அர்ஹான் சிங் நோட்டீஸ் அனுப்பினார்.