சூரிய ஒளி தகடுகள் : மின் கட்டணத்தை மிச்சம் செய்யும் மும்பை மசூதி

மும்பை

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஜமா மசூதியில் சூரிய ஓளி மின் தகடுகள் பொருத்தப்பட்டதால் மின் கட்டணம் குறைந்துள்ளது.

 

மும்பை நகரில் உள்ள பாந்த்ரா பகுதியில் சாமி விவேகானந்தா சாலையில் ஜமா மசூதி என்னும் மசூதி அமைந்துள்ளது.  இந்த மசூதி மும்பையின் மிகப் பெரிய மசூதிகளில் ஒன்றாகும்.  இந்த மசூதிக்கு தினமும் தொழுகைக்காகா ஏராளமான இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கமாகும்.   ஜமா மசூதிக்கு மாதம் ஒன்றுக்கு மின்கட்டணமாக சுமார் ரூ.50000 செலுத்தப்பட்டு வந்தது.

எனவே இந்த மசூதி நிர்வாகம் மரபு சாரா மின் உற்பத்தி முறைக்கு மாற திட்டமிட்டது.   இது போல ஐந்து மசூதிகளில் மரபு சாரா மின் உற்பத்திக்காக சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.  அதே முறையில் இந்த மசூதியிலும் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்டன.   இந்தப் பணியை செய்த அக்யூட் சொல்யூஷன் என்னும் தனியார் நிறுவனம் செய்துள்ளது.   தற்போது இந்த மசூதி மின்கட்டணமாக சுமார் ரூ.10000க்கும் குறைவாகவே செலுத்தி வருகிறது.

அக்யூட் சொல்யூஷன் நிறுவன பங்குதாரரான சித்திக்கி அகமது, “இந்த சோலார் தகடுகள் பொருத்த ரூ.16 .8 லட்சம் செலவாக் ஊள்ளது.   இதற்காக 92 தகடுகள் பொருத்தப்பட்டு 30 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.   இந்த பணத்தை சுமார் மூன்றரை வருடங்களில் மின் கட்டணக் குறைவின் மூலம் சரிக்கட்டி விட முடியும்” என தெரிவித்துள்ளார்.