மும்பையில் கட்டிடத்தில் மோதி தீ பிடித்து எரிந்த விமானம் (வீடியோ)

மும்பை:

மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியாருக்கு சொந்த விமானம் ஒன்று , காட்கோபர் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மொட்டை மாடியில் மோதி  விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தனியாருக்கு சொந்த அந்த சிறிய ரக விமானத்தில் 5 பேர் பயணம் செய்ததாகவும், விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் காட்கோபர் பகுதியில் உள்ள  தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றின் மாடியில் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உடல்கருகி இறந்தனர். விபத்து குறித்துஅ றிய விமானத்தின் கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் விழுந்து தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ…

நன்றி: ANI