காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது

டில்லி:
காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருப்பவர் பிரியங்கா சதுர்வேதி. இவரது 10 வயது மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது.

கிரிஷ் மகேஸ்வரி என்ற நபர் அவரது டுவிட்டர் மூலம் இந்த மிரட்டல் பதிவை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இது கடும் கண்டனத்துக்கு ஆளானவுடன் அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இது குறித்து பிரியங்கா சதுர்வேதி டில்லி மற்றும் மும்பை போலீசில் புகார் செய்தார். மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து அகமதாபாத்தில் கிரிஷ் என்ற நபரை கைது செய்தனர்.

இதையடுத்து சதுர்வேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி