மும்பை: BARC எனப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சிலின் சாதனங்களை தவறாகப் பயன்படுத்தி, டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்தது தொடர்பான ஒரு மோசடியை மும்பை காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சி சேனல்கள் தொடர்பான டிஆர்பி என்பது, சேனல்களை எத்தனை பேர் கண்டுகளிக்கிறார்கள், அவர்கள் எந்த சமூக-பொருளாதாரப் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட சேனலை எவ்வளவு நேரம் கண்டுகளிக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவதாகும்.
இந்த கால அளவு என்பது மணிநேரங்கள், நாள் கணக்கு அல்லது வாரக் கணக்கு என்பதில் அடங்கும். இந்த விஷயத்தில், இந்தியாவில் சர்வதேச தரஅளவு பின்பற்றப்படுகிறது. டிஆர்பி தொடர்பான தரவுகள், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு வெளியிடப்படுகின்றன.
தற்போது, இந்த டிஆர்பி கணக்கீட்டு விஷயத்தில்தான் மோசடி நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது.