கொரோனா விழிப்புணர்வுக்காக ஷாரூக் கான் படக் காட்சியை உதாரணம் காட்டிய மும்பை போலீஸ்….!

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் அரசும், காவல்துறையும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மும்பை காவல்துறை 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மெயின் ஹூன் நா’.எனும் ஷாரூக் கான் படத்தின் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு பெற வழிகாட்டியுள்ளது .

இப்படத்தில், பேசும்போது எச்சில் தெறிக்கும் ஆசிரியரிடமிருந்து தப்பிக்க மாணவர்கள் முகத்தில் கைக்குட்டை, முகமூடி ஆகியவற்றை அணிந்து கொள்வார்கள். ஒரு காட்சியில் அந்த ஆசிரியர் பேசும்போது தெறிக்கும் எச்சிலிலிருந்து தப்பிக்க ஷாரூக் கான் ‘மேட்ரிக்ஸ்’ ஹாலிவுட் படத்தில் வருவது போன்று டைவ் அடிப்பார்.

இந்தக் காட்சியை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காவல்துறை, ”மாஸ்க் அணிந்து கொண்டால் ஷாரூக் இனிமேல் இது போன்ற சாகசங்களைச் செய்ய வேண்டியதில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.