Random image

கவிஞர் மீது அவதூறு : போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராக கங்கனாவுக்கு சம்மன்

 

சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா ரணாவத், பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளார்.

இந்தி சினிமாவின் பிரபல கவிஞரான ஜாவேத் அக்தர் குறித்து கங்கனா அளித்த பேட்டியால் கோபம் அடைந்த அவர், மும்பையின் அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

“நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் எனக்கு இருந்த தொடர்பு குறித்து வெளியில் சொல்லக்கூடாது என ஜாவேத் அக்தர் மிரட்டினார்” என அந்த பேட்டியில் கங்கனா குறிப்பிட்டு இருந்தார்.

கங்கனா மீது கவிஞர் ஜாவேத் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

“இந்த சம்பவம் குறித்து விசாரித்து, பிப்ரவரி ஒன்றாம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்” என ஜுகு போலீசாருக்கு அந்தேரி நீதிமன்றம் ஆணையிட்டது.

இதையடுத்து, ஜாவேத் அக்தர் அளித்த புகார் குறித்து விளக்கம் அளிக்க இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர் ஆகுமாறு கங்கனாவுக்கு ஜுகு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

– பா. பாரதி