இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதிக அளவில் நிதியுதவி கொடுத்துள்ளார். முதலில் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார்.

பின்பு, மும்பை மாநகராட்சிக்கு 3 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். தற்போது மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

மும்பை காவல்துறை அறக்கட்டளைக்காக அக்‌ஷய் குமாரின் ரூ.2 கோடி நன்கொடைக்கு, காவல்துறை நன்றி தெரிவித்தது .

https://twitter.com/akshaykumar/status/1254721309029789696

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அக்‌ஷய் குமார், “கொரோனாவை எதிர்த்து உயிரிழந்த மும்பை காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள்கள் சந்திரகாந்த் பெண்ட்ரூகர் மற்றும் சந்தீப் சூர்வேவுக்கு என் வணக்கங்கள். நான் எனது கடமையைச் செய்திருக்கிறேன். நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் பாதுகாப்பாக, உயிரோடு இருப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்பதை மறக்க வேண்டாம்” என்று பகிர்ந்துள்ளார்.