Random image

தொடரும் கனமழை: மும்பையில் புறநகர் ரெயில்சேவை பாதிப்பு

மும்பை:

மும்பையில் பெய்து வரும் தொடர்  கனமழை காரணமாக  மும்பையில் ரெயில் சேவை பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. ரெயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் மேற்கு ரெயில்வேயின் புறநகர் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது.

மும்பை டப்பாவாலாக்கள் இன்று பணி செய்ய இயலாது என்று அறிவித்து உள்ளனர்.

மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக  பள்ளி, கல்லூரி களுக்கு  விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்ப டைந்துள்ளது.

தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள்  பாதுகாப்பான பகுதிக்கு செல்ல மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இன்று 4வது நாளாக கனமழை மழை நீடித்துவருகிறது.

இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் மழை காரணமாக  சாலைகள், ரெயில் தண்ட வாளங்கள், விமான ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. மேற்கு ரயில்வேயின் பெரும்பாலான  புறநகர் ரயில் சேவைகள் இன்று முடங்கின. இருந்தாலும் பல புறநகர் ரெயில் சேவைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விரார்- நால சோபராவிற்கும்  இடையே தண்டவாளத்தில் அதிக நீர் உள்ளதால், அந்த வழியில் செல்லும் ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள் ளது என்றும்,   சர்ச்டேட்டிற்கும், வாசியுக்கும் இடையே செல்லும் ரெயில் மெதுவாக இயக்கப்பட்டு வருவதாகவும்  ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதே வேளையில்  மத்திய ரயில்வேயின் உள்ளூர் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட வில்லைஎன்றும், முக்கிய பகுதிகயாள  துறைமுகம் மற்றும்  நெடுஞ்சாலை பகுதிகளில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

“கடந்த 72 மணிநேரத்துக்கும் மேலாக  கடுமையான மழை பெய்து வரும் நிலை யில், நாங்கள் தடையில்லா சேவைகளை வழங்கினோம் என்று என்ற அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

ரெயில் தண்டவாளங்களில் தேங்கி உள்ள நீரை மோட்டார் பம்புசெட்டுகள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, வீடுகளில் உணவை வாங்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்று சேர்த்து வரும் டப்பா வாலாக்கள்,  இன்று உணவு வாங்கி கொடுக்கப்படாது என்று அறிவித்து உள்ளனர்.

மழையால் ஏற்படும் பாதிப்பை  எதிர்கொள்ள மாநில அரசு தயாராக இருப்பதாக மாநில கல்வி  அமைச்சர்  வினோத் தாவ்தே தெரிவித்து உள்ளார்.

மாநிலம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயாராக இருப்பதாகவும், எதையும் சமாளிக்கும் விதத்தில் தாங்கள் தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் அச்ச மடைய தேவையில்லை என்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு அறிவித்து உள்ளது.

இதற்கிடையில்,  நேற்று இரவு மட்டும் மும்பையில் 200 மிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும், இந்த கனமழை வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என்றும்  இந்திய வானியல் துறை (ஐஎம்டி) எச்சரிக்கை விடுத்துள்ளது.