மும்பை:

மும்பை நகரில் சம்பளம் அதிகம் உயர்ந்து கொண்டு போனாலும், அங்கு வீடு வாங்குவது கடினமாகவே உள்ளது.


இந்தியாவின் மற்ற நகரங்களை விட, மும்பை நகரில் மலிவாக வீடு வாங்குவது சாத்தியமில்லாமல் உள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி ரியல் எஸ்டேட் சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மும்பையின் சராசரி வீட்டு வருமானம் 16% குறைந்துள்ளது. 1,000 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வங்கி கடன் பெறுவதற்கான சம்பளம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்குக் காரணம் மும்பையின் விண்ணை தொடும் அளவுக்கு இருக்கும் ரியல் எஸ்டேட் விலைதான்.
இதற்காக அதிக விலையில் வீடு வாங்க வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வருமானம் எட்டா உயரத்தில் உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஐதராபாத்தில் வங்கிக் கடனுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தைவிட, ஒருவரது சம்பளம் அதிகமாக இருந்தது. இன்றுவரை வீடு வாங்க கடன் தொகைக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் அதிகரித்துக் கொண்டே போகிறது.  ஆனால், மும்பையில் நிலைமை தலைகீழாக உள்ளது.

பொதுவாக பெரு நகரங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நினைவாக சிரமமாகவே உள்ளது.