துபாய்: கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்துள்ளது.

அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, 54 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் மொத்தம் 80 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் அடித்தார்.

செளரப் திவாரி 21 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்கள‍ையும், போலார்டு 13 ரன்களையும் அடித்தனர்.

கொல்கத்தா அணியின் சார்பில், ஷிவம் மாவி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 196 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி, ஆடிவருகிறது கொல்கத்தா அணி.