137 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை – ஆனாலும் வெல்லுமா?

சென்னை: டெல்லி அணிக்கெதிராக போட்டியில், முதலில் பேட்டிங் ச‍ெய்த மும்பை அணி, 20 ஓவர்களில், 137 ரன்களை மட்டுமே எடுத்து, எளிதான இலக்க‍ையே, டெல்லிக்கு எதிராக நிர்ணயித்துள்ளது.

அந்த அணியின் ஜெயந்த் யாதவ், கடைசி நேரத்தில் 23 ரன்களை அடித்தாலும், அதற்காக 22 பந்துகளை எடுத்துக்கொண்டார். பொல்லார்டு 2 ரன்களிலும், இஷா கிஷான் 26(28 பந்துகள்) ரன்களையும் அடித்தனர்.

அந்தவகையில், அந்த அணியில் ரோகித்தும், ‍சூர்யகுமாரும் மட்டுமே, சுமாரான அதிரடிய ஆட்டத்தையாவது ஆடினர். முடிவில், 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது அந்த அணி.

டெல்லியின் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குறைந்த ரன்களையே அடித்திருந்தாலும், கடந்த 2 போட்டிகளைப் போல், மும்பை அணி வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.