மும்பையை வீழ்த்த பஞ்சாபிற்கு 177 ரன்கள் தேவை!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 176 ரன்களை எடுத்துள்ளது.

கேப்டன் ரோகித் ஷர்மா 9 ரன்களில் அவுட்டாக, குவின்டன் டி காக் 43 பந்துகளில் 53 ரன்களை அடித்தார். குருனல் பாண்ட்யா 34 ரன்களை அடித்தார்.

அதேசமயம், அதிரடி மன்னன் பொல்லார்டு 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 1 பவுண்டரியுடன் 34 ரன்களையும், நாதன் நைல் 12 பந்துகளில் 24 ரன்களையும் அடித்து அணியின் ஸ்கோர் பாதுகாப்பான நிலைக்கு உயர வழிவகுத்தனர்.

இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது மும்பை அணி.

பஞ்சாப் அணி சார்பில் மொத்தம் 7 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 35 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

 

You may have missed