ராஜஸ்தான் அணிக்கு 196 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி!

அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி.

அபுதாபி மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் துவக்கம் அந்தளவு சிறப்பாக அமையவில்லை எனலாம். சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 40 ரன்களை அடித்தார்.

செளரப் திவாரி 25 பந்துகளில் 34 ரன்களை அடித்தார். கடைசியில், ஆட்டத்தை மாற்றியவர் ஹர்திக் பாண்டயாதான். வெறும் 21 பந்துகளை சந்தித்த அவர், 7 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 60 ரன்களை விளாசினார்.

இதனால், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 195 ரன்களை குவித்தது.

ராஜஸ்தான் பவுலர் அங்கிட் ராஜ்பூட், 4 ஓவர்கள் வீசி, விக்கெட் எதுவும் எடுக்காமல் 60 ரன்களை அள்ளி வழங்கினார்.