முதல் பிளே ஆஃப் – டெல்லிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்த மும்பை!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200 ரன்களை எடுத்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, மும்பையை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதன்படி களமிறங்கிய துவக்க வீரர் டி காக் 25 பந்துகளில் 40 ரன்களை அடித்தார்.

கேப்டன் ரோகித் ஷர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களை அடித்தார்.

இஷான் கிஷான் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களை விளாசினார். பொல்லார்டு 10 ரன்களுக்கு அவுட்டாக, கடைசிநேர அதிரடியாக ஹர்திக் பாண்ட்யா, 14 பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து 37 ரன்களை விளாச, மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

டெல்லி அணியின் பவுலர் நார்ட்ஜே, 4 ஓவர்களே வீசி 1 விக்கெட் எடுத்து 50 ரன்களை வழங்கினார். டேனியல் சாம்ஸ் 4 ஓவர்களில் 44 ரன்களை வழங்கினார்.