மும்பை

ஹாராஷ்டிரா அரசு, 27000 ஆசிரியர் மற்றும் பள்ளிப் பணியாளர்களை பாஜக எம் எல் சி நடத்தும் (MDC) மும்பை கூட்டுறவு வங்கியில் கணக்கு துவக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ,

மஹாராஷ்டிராவில் மும்பை நகரில் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் சுமார் 27000 பேர் பணி புரிகின்றனர்,  இவர்களது ஊதியம் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.   இந்த ஊதியத்தை செலுத்த அனைத்து பள்ளி ஊழியர்களும் மும்பை டிஸ்டிரிக்ட் செண்டிரல் கோ-ஆபரேடிவ் பேங்க் எனப்படும் வங்கியில் தங்கள் கணக்கு களை துவக்க வேண்டும் என அரசு வலியுறுத்துயுள்ளது.

இந்த வங்கியின் சேர்மன் பிரவின் டாரேகர் பாஜக வை சேர்ந்த எம் எல் சி ஆவார்.

இந்த அறிவிப்பு ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா) கணக்கு வைத்துள்ள் அனைத்து பள்ளி ஊழியர்களுக்கும் அதிருப்தியை அளித்துள்ளது.   அவர்கள் தங்களின் பணத்துக்கு கூட்டுறவு வங்கிகளில் பாதுகாப்பு இருக்காது என எண்ணுகின்றனர்.

ஒரு மாத சம்பளத்தொகை சுமார் ரூ 150 கோடியாகும்.

ஆசிரியர்கள் சங்கத்தலைவர் அப்யங்கர் இது பற்றி கூறியதாவது

இது முழுக்க முழுக்க அரசியல் சார்பான முடிவு,  இதில் எந்தவிதமான ஒரு லாஜிக்கும் இல்லை.   1971ல் அரசு அனைத்து ஊழியர்களின் ஊதியத்தையும் மும்பை கூட்டுறவு வங்கியின் மூலமே அளித்து வந்தது.  கூட்டுறவு வங்கிகளின் மேம்பாட்டுக்காக அது நடந்தது.  ஆனால் 2011ல் இந்த வங்கியில்  நடந்த பல முறைகேடுகளால் பள்ளி ஊழியர்கள் பல இடர்களை எதிர்கொண்டனர்.  தேவையான நேரட்தில் பணம் எடுக்கவும் முடியவில்லை.   அதன் பிறகே கணக்குகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்றப் பட்டது.  அதன் பின் எந்த ஒரு கஷ்டமும் இல்லை.  ஆனால் இப்போது ஊழியர் சங்கத்தையும் ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருந்தத்தக்கது.

இவ்வாறு அபயங்கர் கூறினார்

இது குறித்து கல்வி அமைச்சர் வினோத் தாடே “அரசுக்கும் பணியாளர்களுக்கும் அதிக வசதிகளைத் தரும் வங்கியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.  இந்த வங்கி கூட்டுறவுத்துறைக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தனது வங்கியின் ஆண்டறிக்கைகளை கொடுத்துள்ளது.  அதனையும் ஆராய்ந்த பின் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  இந்த அரசு ஆசிரியர்களுக்கோ மற்றப் பணியாளர்களுக்கோ எந்த ஒரு பண நஷ்டத்தையும் ஏற்படுத்தாது” என தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த அதிக வசதிகள் என்னென்ன என்பதை அவர் குறிப்பிடவே இல்லை.