“மும்பை தாக்குதலில் தொடர்புடையவரகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு “- அமெரிக்கா அறிவிப்பு

--

மும்பை தாஜ் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

2008ம் ஆண்டு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர். தாஜ் ஹோட்டலினுள் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டுத்தள்ளினர். உலக நாடுகளை அதிரவைத்த இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட சுமார் 166பேர் கொல்லப்பட்டனர்.

mumbai

தீவிரவாதிகளை எதிர்த்து பாதுக்காப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் கசாப் என்ற தீவிரவாதி மற்றும் உயிருடன் பிடிக்கப்பட்டான். விராசணைக்கு பின்னர் கசாப் நீதிமன்ற உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.

தற்போது மும்பை தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கொல்லப்பட்டாலும் உண்மை குற்றவாளைகள் தண்டனை பெறாமல் இருந்து வருகின்றனர். பத்து நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி இது தொடர்பாக அமெரிக்க துணை அதிபரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று வெளியிட்ட அறிவிப்பில் ” மும்பை தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கு காரணமான இருக்கும் குறிப்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின்மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடையை தீவிரமாகச் செயல்படுத்த அனைத்து நாடுகளுக்கும் கோரியுள்ளோம்.

சர்வதேச நாடுகளுடன் இணைந்து மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும். இந்த தாக்குதலில் உறவினர்களை இழந்து வாரும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் “ என கூறப்பட்டுள்ளது.

மேலும், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்தும் அவர்களுக்கு உதவியர்கள் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசாக அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.