மும்பை: 32 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

fireமும்பை:

மும்பையின் கண்டிவலி பகுதியிலமைந்துள்ள 32 மாடிக்கட்டிடத்தில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பையின் கண்டிவலி மேற்கு பகுதியிலுள்ள எஸ்.வி சாலையில் ஹிராநந்தினி டவர் என்னும் 32 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் 32 ஆவது மடியில் இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து  பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக எட்டு தீயனைப்பு வண்டிகள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் மூன்று தண்ணீர் டேங்கர் லாரிகள்  ஆகியவை விரைந்து சென்று  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

1mumbai_fire

கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் உடனே அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.  சேத விவரம் தெரியவில்லை. தீ விபத்திற்கான காரணமும் தெரியவில்லை.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.