ஐபிஎல் சூதாட்டம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்த ஏடிஜிபி தற்கொலை

--

மும்பை:

மகாராஷ்டிரா காவல்துறையில் ஏடிஜிபி.யாக பணியாற்றி வந்தவர் ஹிமன்ஷு ராய். பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவர். இவர் 2013ம் ஆண்டில் ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு, வக்கீல் பல்லவி கொலை வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்தவர்.\

ஹிமன்ஷு ராய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று தெற்கு மும்பையில் உள்ள அவரது வீட்டில் மதியம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயர் பொறுப்பில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது மகாராஷ்டிரா காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.