கவர்ச்சிக்கன்னி, “மச்சான்ஸ்” புகழ் நமீதா, அ.தி.மு.கவில் சேர்ந்திருக்கிறார். அவரிடம் பத்திரிகை டாட் காம் இதழுக்காக ஒரு மினி பேட்டி:
 
1
 
திடீர்னு அ.தி.மு.க.வில சேர்ந்திருக்கீங்க. அதை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
திடீர்னு இல்லே.. நாலு வருசமாவே அரசியலுக்கு வரணும்னு ஆசைப்ட்டேன். அரசியலை கவனமா ஸ்டடி பண்ணேன்.  அதில “அம்மா”தான் பெஸட்னு தெரிஞ்சுது. ஸோ.. ஹேப்பியா ஏ.டி.எம்.கே.ல ஜாயின் பண்ணிட்டேன்.
ஜெயலலிதாதான் பெஸ்ட்னு எப்டி சொல்றீங்க?
வாட்.. என்ன இப்படி கேக்கிறீங்க?  எலக்ட்ரிசிட்டி பிராப்ளம் இருந்துச்சு. அம்மாதான் சரி பண்ணாங்க. அது மட்டுமா.. ஒன் ரூப்பியில இட்லி, ஃபைவ் ருப்பியில சாப்பாடு… இதெல்லாம் எவ்ளோ பெரிய விசயம்!
தாய்மார்களுக்கு பஸ் ஸ்டாண்டில தனி அறை, தாலி, பசங்களுக்கு லேப்டாப்.. இப்டி சொல்லிக்கிட்டே போகலாமே!
 ஒயின்ஷாப் விவகாரம், வெள்ளம் வந்தப்போ சரியா நிவாரணம் கிடைக்கலை.. இப்படி பல புகார் இருக்கே..
அதெல்லாம் தப்பு. மக்களுக்கு நல்லா தெரியும், அம்மா எவ்ளோ செஞ்சிருக்காங்கன்னு…!
 
2
அரசியல்ல இறங்கிட்டீங்க.. அடுத்து எம்.எல்.ஏ., மந்திரி, முதல்மந்திரி.. என ரூட் பிடிக்க வேண்டியதுதானா
(பதறுகிறார்) ஹய்யோ..  எனக்கு தேர்தல்ல போட்டியிடுற மூட் இல்லே.  எண்ணம் இல்லே.. இப்போ என் ஆம்பிஷன் எல்லாமே, . அ.தி.மு.க. ஜெயிக்கணும்.. அம்மா மீண்டும் முதல்வர் ஆகணும். அவ்ளோதான்.
எல்லா ஊர்களுக்கும் போய் பிரச்சாரம் செய்ற ஐடியா இருக்கா?
டெபனட்லி.. வொய் நாட்?
 
3
 
 என்ன பேசுவீங்க?.
அதை இப்போ சொல்ல முடியாது. என்ன பேசணும்னு அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன்
நீங்க மச்சான்ஸ்னு கூப்பிடற அழகே தனி. ஆனா அரசியல்மேடையில் பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளேனு பேசுவாங்க. உங்களுக்கு செட் ஆகுமா?
ஓ…  சினிமா மீட்டிங் வேற.. பொலிடிகல் மீட்டிங் வேற.. பாருங்க, எப்படி பேசறேன்னு!