பாலிவுட் நடிகை மும்தாஜ் இறந்துவிட்டதாகக் கூறப்படும் தகவலுக்கு அவரது குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

70களில் பாலிவுட்டில் கனவுக்கன்னியாக உலாவந்தவர் மும்தாஜ் .

கடந்த வெள்ளிக்கிழமை இவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலவின.

இதுகுறித்து பிடிஐயிடம் மும்தாஜ் குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசுகையில், ”மும்தாஜ் உயிரோடு இருக்கிறார். நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரலிலும் இப்படியொரு வதந்தி உலவியபோது மும்தாஜின் இளைய மகள் தான்யா சமூக வலைதளங்களில் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.