முனீஷ்காந்த் நடிப்பில் உருவாகும் ‘மிடில் கிளாஸ்’….!

‘அறம்’, ‘குலேபகாவலி’, ‘ஐரா’, ‘ஹீரோ’, ‘க.பெ.ரணசிங்கம்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் அடுத்ததாக ‘மிடில் கிளாஸ்’ என்கிற திரைப்படத்தைத் தயாரிக்கிறது. ‘டோரா’ திரைப்படத்தின் இயக்குநர் தாஸ் ராமசாமி இணைந்து தயாரிக்கிறார்.

முனீஷ்காந்த் ராமதாஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை கிஷோர் எம்.ராமலிங்கம் இயக்குகிறார்.

‘கலக்கப் போவது யாரு’ ராமரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆர்வி ஒளிப்பதிவு செய்கிறார்.