குஜராத்தில் பானிப்பூரி விற்பனைக்கு தடை

காந்திநகர்:

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சி பகுதியில் பானிப்பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமற்ற முறையில் இது தயாரிக்கப்படுவதால் இதன் விற்பனைக்கு தற்காலிக தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பருவ மழை காலம் தொடங்கியிருப்பதால் மக்களுக்கு பல நோய்கள் தாக்க கூடிய வாய்ப்பு இருப்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

சுகாதார மற்ற முறையில் தயாரிக்கப்படும் பானிபபூரியால் டய்பாய்டு, மஞ்சள் காமாலை, புட் பாய்சன் போன்றவை பரவ கூடிய வாயப்புள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வதோதரா முழுவதும் தீவிர சோதனை நடத்தி பானிப்பூரிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.