முனிசேகர் எனது கணவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை…பெரிய பாண்டியன் மனைவி

திருநெல்வேலி:

‘‘தம் கணவரை ஆய்வாளர் முனிசேகர் திட்டமிட்டு சுட்டிருக்க வாய்ப்பில்லை’’ என்று மறைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மனைவி பானுரேகா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையரை பிடிக்க சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறந்தார். உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா தான் பெரியண்ணன் உடலில் இருந்ததாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கூறுகையில், ‘‘எனது கணவரின் நண்பர் முனிசேகர். அவர் எனது கணவரை திட்டமிட்டு சுட்டிருக்க வாய்ப்பு இல்லை. பெரிய பாண்டியன் மரணம் குறித்து ராஜஸ்தான் தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை அறிக்கை 20 நாட்களில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அறிக்கையை பெற்ற பிறகே உண்மை தெரிய வரும்’’ என்றார்.