ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேட்டின இணைய பக்கம், மீட்கப்பட்டது.

தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் இணையப்பக்கத்தை லிஜியன் என்கிற ஹேக்கர்ஸ் கும்பல் முடக்கியது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், உ.பி.யில் மறுதேர்தல் நடத்த வேண்டும்  வலியுறுத்தும் வாசகங்களை பதிவிட்டது. மேலும், வாக்குபதிவு இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகள் தொடர்பான காட்சிகளையும் பதிவேற்றியது. இதனால் தி.மு.கவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில்,  கணினி நிபுணர்கள் பெரும் முயற்சி எடுத்து, இணைதளத்தை மீட்டனர். தற்போது முரசொலி இணையதளம்வழக்கம் போல் செயல்படுகிறது.

முரசொலி இணையதளத்தை முடக்கிய லிஜியன் என்கிற ஹேக்கர்ஸ் கும்பல் ஏற்கெனவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உட்பட பல முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கியது என்பது  குறிப்பிடத்தக்கது.