முரசொலி பத்திரிகையே எனது மூத்த அண்ணன் : ஸ்டாலின் கடிதம்

சென்னை

திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் முரசொலி பத்திரிகையை தனது மூத்த் அண்ணன் என தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவரால் உருவாக்கப்பட்ட முரசொலி நாளிதழ் திமுகவின் அதிகாரபூர்வமான  பத்திரிகை ஆகும்.   முரசொலி இதழில் கருணாநிதி தினமும் உடன்பிறப்புக்கு கடிதம் என எழுதிக் கொண்டிருந்தார்.  இன்று முரசொலி இதழின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.  அதை ஒட்டி திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை முரசொலி வெளியிட்டுள்ளது.

அந்த கடிதத்தில்,

”என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர்      அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்

ஆகஸ்ட்  10  –  தலைவர் கலைஞர்    அவர்களின்  சாதனை வரலாற்றில்  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்  நாள்களில் ஒன்று.  அவரது  முதல்  பிள்ளையான ‘முரசொலி’  இதழ்  பிறந்த  ஏடு’தான்  கட்சியை  வளர்க்கும்.‘கட்சி’தான்  ஏட்டையும்  வளர்க்கும். பல  நூறு  இதழ்களால்  வளர்க்கப்பட்டது  திராவிட  இயக்கம்.  இதனைக்கழகத்  தோழர்கள்  மறந்து  விடக்கூடாது.

கழக  உடன்பிறப்புகளுக்கு‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவதுபோன்று இயல்பானதாக மாறினால்தான் தலைவர் கலைஞரின்  மூத்தபிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். ‘முரசொலி’யை வளர்ப்பது என்பது  தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வளர்ப்பது    போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும்.  முரசொலி, தலைவர் கலைஞரின்  மூத்தபிள்ளை  என்றால்  எனக்கு  மூத்த அண்ணன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்