திமுக அதிகாரபூர்வ நாளேடு முரசொலி  இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது

சென்னை:

திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலியின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்நாளிதழின் பவள விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியால் துவங்கப்பட்டது இந்த இதழ். அவர் முழு நலத்துடன் இருக்கும்வரை அவரது  நேரடியான மேற்பார்வையில் வெளியாகி வந்தது.

இந்நிலையில் முரசொலி நாளிதழின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அதன் முகப்பு பக்கத்தில் ஹேக்கர் பக்கத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதள பாதுகாப்பு குறித்து இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்  கிண்டலாக ஹேக்கர் பதிவு செய்துள்ளனர்.

முரசொலியின் தொழில்நுட்ப பிரிவினர் இணையதளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புத்தாண்டு அன்று முரசொலி இணையதளம் முடக்கப்பட்டது திமுகவினரிடையே சென்டிமெண்ட்டாக வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.