பகுத்தறிவாளர் ஃபாரூக் கொலை வழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதி சரண்

கோவை:

பகுத்தறிவாளர் ஃபாரூக் கொலை வழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதி அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார்.

கோவை உக்கடம் லாரி பேட்டை மீன்மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ஃபாரூக். (வயது 32) இரும்பு வியாபாரம் செய்துவந்தார். அவருக்கு ரஷீதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

திராவிடர் விடுதலை கழகத்தில் ஃபாரூக் தீவிரமாக இயங்கி வந்தார். இறை மறுப்பாளர். ஆகவே இவருக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்தபடி இருந்தன. இது குறித்து தனது முகநூல் பக்கத்திலும் ஃபாரூக் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு கோவை உக்கடம், மீன்மார்க்கெட் அருகில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
“அல்லாவின் பெயரால் உன்னை கொல்கிறோம்”என்று உரக்க கத்தியபடி அந்த கும்பல் ஃபாரூக்கை வெடிக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று இந்த கொலை வழக்கில் கோவை போத்தனூரை சேர்ந்த மீரான் குட்டியின் மகன், அன்சர் (31) சரண் அடைந்தார்.
இவர் இஸ்லாமிய பயங்கரவாதி என்கிற தகவல் மட்டுமே இப்போது வெளியாகி உள்ளது. எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்கிற தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published.